கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்ததால் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கண்காணித்துள்ளார்கள். பிறகு அவர்கள் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பாதை வழியாக ஜிப்பில் சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டியுள்ளார்கள். அப்போது திடீரென்று காட்டு யானை திரும்பி வனத்துறை வாகனத்தை நோக்கி வந்ததால் அவர்கள் வாகனத்தை நிறுத்தி உள்ளார்கள்.
இதற்கிடையே அந்த யானை ஆக்ரோஷமாக வந்து துதிக்கையால் வாகனத்தை தாக்கியுள்ளது. இதனால் ஜீப்பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து சுதாரித்துக் கொண்டு உடனே வாகனத்தை பின்னோக்கி இயக்கி அதிர்ஷ்டமாக உயிர் தப்பி உள்ளார்கள். இந்த வீடியோவை அங்கிருந்து ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
