செப்..8 பூமிக்கு வரும் கடவுள்… உயிர்த்தியாகம் செய்யும் 21 பேர்… கர்நாடகாவில் பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஆவணி 25, 2025

Spread the love

கடவுள் மீதான நம்பிக்கை என்பது ஆன்மீகம் தான். ஆனால் ஒரு சிலர் இன்றளவும் மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். அதன்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அருகே அனந்தபூர் கிராமத்தை சேர்ந்த துகாராம், சாவித்திரி, ரமேஷ் மற்றும் வைஷ்ணவி உட்பட 21 பேர் உயிர்த்தியாகம் செய்ய உள்ளதாகவும் அவர்கள் கடவுளை காண்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் பரவியது. இது குறித்து போலீசார் மற்றும் அப்பகுதியில் உள்ள மாடாதிபதி ஆகியோர் வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது சந்தா ராம் பால் என்ற சாமியார் கடந்த 2014 ஆம் ஆண்டு கலவர வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் எழுதிய புத்தகத்தைப் படித்த துகாராம் உட்பட 21 பேரும் கடவுளைத் தேடி உயிர்த்தியாகம் செய்வதற்கு முன்வந்துள்ளனர். அதன்படி வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி உன்னத கடவுள் பூமிக்கு வர உள்ளார், அவர் அனைவரின் உயிரையும் எடுக்க உள்ளார் என்று துகாராம் உட்பட 21 பேரும் மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அன்றைய தினம் தாங்கள் 21 பேரும் கடவுளை காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.