மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாப்பதற்காக, பல சிறப்பான பென்ஷன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதியோருக்கு மாதம் ரூ. 5000 வரை, அரசிடமிருந்து பென்ஷன் கிடைக்கிறது. வேலை செய்ய இயலாத வயதில், முதியோர்க்கு நிதி பாதுகாப்பு அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தில் சிறிய வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண குடும்பத்தினர் என அனைவரும் சேர முடியும். மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையையும், கிடைக்கும் பென்சனையும், பயனாளர்கள் முன்கூட்டியே நிர்ணயிக்க முடியும்.
மேலும் அடல்ட் பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புவோர், 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒருவர் சுமார் 30 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ. 577 செலுத்தினால் எதிர்காலத்தில் மாதம் ரூ. 5000 பென்ஷன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அடல் பென்ஷன் யோஜனா படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் அருகில் உள்ள CSC மையத்தை அணுகி, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். சிறிய அளவில் சேமித்தால் வயது முதிர்வில், மாதாந்திர வருமானம் கிடைக்கும்.
