சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக கருதப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இன்று அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 37 வயதான இவர் கடந்த 2010 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 7195 ரன்கள் குவித்துள்ளார். மேலும் புஜாரா 19 சதங்களும், 35 அரை சதங்களையும் விலாசியுள்ளார். அதே நேரத்தில் 5 ODI-களே மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்திய அணிக்காக டி20-ல் விளையாடியது இல்லை.
