பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர், தனக்கு மஞ்சகாமாலை பாதிக்கப்பட்ட போது, உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதை குறித்து தற்போது பல பட நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.
அதில், நான் மருத்துவமனையில் இருந்த பொழுது நான் இறந்து விட்டதாக சில செய்திகள் பரவின. நான் இறந்து விட்டதாக எண்ணி, சிலர் என் வீட்டிற்கு மாலையுடன் வந்தனர். சமூக ஊடகங்களில் நான் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை கேள்விப்பட்ட பலர், என் வீட்டிற்கு வந்தது பற்றி, என் மனைவி எனக்கு போன் செய்து வருத்தத்துடன் அழுதார். மாலை கொண்டு வந்தவர்களிடம், மாலையை அவங்களுக்கே போட்டு, நான் இப்ப வரேன் என்று சொல்லி அனுப்பினேன். ஒருவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவினால், அவர்களின் மீதம் உள்ள வாழ்க்கை மறுபிறப்பிற்கு சமம். அதேபோல் எனக்கு சில மறுபிறப்புகள் கிடைத்துள்ளது, என்று உணர்ச்சி பூர்வமாக பேசினார்.
