பிஸியா இருக்கணும்னு இதை மட்டும் பண்ண கூடாது…! சினிமாவில் நான் கற்று கொண்ட விஷயம் இதுதான்…. நடிகை சாய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்….!!

By Devi Ramu on ஆவணி 23, 2025

Spread the love

நடிகை சாய் மஞ்ச்ரேக்கர் சல்மான் கான் அனுப்பில் ரிலீஸ் ஆன தபாங் 3 திரைப்படத்தின் மூலம் திரையரங்கில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தெலுங்கில் மேஜர், கனி, ஸ்கண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சாய் மஞ்ச்ரேக்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சிறுவயதிலேயே நான் சினிமாவில் வேலை பார்க்க தொடங்கினேன். அதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதை விட சரியான படங்களை தேர்வு செய்து நடிப்பது தான் முக்கியம். பிஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை.

   

எனக்கு சவாலான கதாபாத்திரங்கள் ஒரு நடிகையாக வளர உதவும் படங்களில் வேலை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ரிலீசான அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி என்ற தெலுங்கு திரைப்படத்தில் சாய் மஞ்ச்ரேக்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.