பெண்ணுக்கு நிச்சயக்கப்பட்ட திருமணம்… ஊருக்கே அழைப்பிதழ் வைத்த பெற்றோர்… மணமகன் அனுப்பிய புகைப்படம்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி..!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

விழுப்புரம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கண்டரக்கோட்டையை சேர்ந்த லட்சுமணன். இவரது மகன் புஷ்பநாதன் (34), இவருக்கும் விழுப்புரம் தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த [28] வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வருகின்ற 5-ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அப்பெண்ணின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் உறவினர்களுக்கு மற்றும் கிராம மக்களுக்கு அனைவருக்கும் கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது புஷ்பநாதன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்  கொண்டதாக புகைப்படங்களை நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்புகைப்படத்தில் புஷ்பநாதன், புதுமணப்பெண்,  புஷ்பநாதனின் தாய் , தந்தை ஆகியோர் இருந்துள்ளனர்.  புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைத்தப்  அப்பெண், இதைப்பற்றி தட்டிகேட்ட உள்ளார். அப்பெண்ணை புஷ்பநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து திட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பெயரில் மூன்று பேரையும் கைதுச் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .