அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

By Devi Ramu on ஆவணி 22, 2025

Spread the love

பிரபல இசையமைப்பாளரான அனிருத் ஹூக்கும் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடத்த திட்டமிட்டார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.  சுமார் 45 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது.

பின்னர் பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அனிருத் அறிவித்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் நாளை கூவத்தூர் பகுதியில் உள்ள மார்க் சொர்ணபூமி என்ற இடத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

   

நாளை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் அனிருத் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக எம்எல்ஏ தரப்பில் கூறப்படுகிறது.

   

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.