பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அந்தவகையில், நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ஆம் தேதியன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறையின் மூலம் மாதம் ரூ.1,500 ரூபாய் வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று (ஆக. 22) முதல் செப் 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை 50 ரூபாய் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
