BIG BREAKING: ஸ்டாலின் மாமா, மாமா… இட்ஸ் வெரி ராங் அங்கிள்… வெளுத்து வாங்கிய விஜய்…!

By Nanthini on ஆவணி 21, 2025

Spread the love

கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது.  விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார்.   கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கினார்.

இதனை தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றி வரும் விஜய், ஸ்டாலின் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள் என கிண்டலடித்துள்ளார். ஸ்டாலின் அங்கிள் உங்கள் ஆட்சியில் எது சரியாக உள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும் போதுமா அங்கிள். பெண்களின் கதறல்கள் உங்கள் காதில் கேட்குதா அங்கிள். உங்களை அப்பா என கூப்பிடுகிறார்களே இது சரியா அங்கிள்? வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள், சொன்னதை எல்லாம் செய்தார்களா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.