திருப்பத்தூரில் பரபரப்பு..! பணத்துக்காக பெண் சிசுக்களை கொன்ற மருத்துவர்… அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!

By Divyamayakannan on ஆவணி 21, 2025

Spread the love

தமிழ்நாட்டில், ஆங்காங்கே பெண் சிசுக்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். அதன் பேரில் கடந்து சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்து பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு 8 கர்ப்பிணி பெண்கள்  ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கி உள்ளனர். வழி தெரியாமல் தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்த கர்ப்பிணிகளை அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அத்தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் கர்ப்பிணிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் பேரில் போலீசாருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெண்கள் வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக வந்தோம் என்று கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் கர்ப்பிணிகளை விசாரித்துள்ளார். கர்ப்பிணிகளை அனுப்பி வைத்தது புரோக்கர்கள் என்றும், வயிற்றில் உள்ள சிசு பெண் என்று அறிந்தால்  சிசுவை கலைப்பதற்காக வந்தது தெரியவந்துள்ளது.

   

இதன் பெயரில் ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணவன் சிவசக்தி (40), மனைவி ஜோதி (37) மற்றும் காவேரிப்பட்டினம் பகுதியில் சேர்ந்த கோவிந்தன் (47) மற்றும் சந்தூர் அடுத்த வெப்பாலம்பட்டி பகுதி சேர்ந்த ரஞ்சிதம் (39), மற்றும் திருப்பத்தூர் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த அமலா (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் உறுதி செய்யப்பட்டு அவர்கள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு, வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சட்ட விரோத ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த சாமிநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மகன் சுகுமார் (60) என்பவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.