மதுரை TVK மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுத்து வருகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் ஒருபுறம் கடும் நெரிசல், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அவதியில் சிரமப்பட்டு வருகின்றனர்.
