குஷ்பூவின் கன்னத்தை பிடித்த பிரபு… அன்னைக்கு சொன்ன அந்த வார்த்தை தான்… “குஷ்பூ இட்லி” பெயருக்கான காரணம் இதுதானா..??

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையானார். கோலிவுட்டில் அதிகமான சில படங்களிலேயே தமிழை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய சொந்த குரலில் ஏன் டப்பிங் பேசி வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என எண்பதுகளில் பல முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டு நடித்தார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்.

1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியா அறிமுகமானார். அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார். ரிக்ஷா மாமா, சின்னத்தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, சிங்காரவேலன் ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கதவை ஆகும்.

   

இந்நிலையில் “குஷ்பு இட்லி” என்ற பெயர் பிரபலமாக யார் காரணம்? என்ற விவரத்தை குஷ்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் பிரபு தன்னுடைய கன்னத்தை பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என்று சொன்னதாகவும், அப்போது முதல் அந்த வார்த்தை பிரபலமானதாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அந்த டயலாக்கே அந்த படத்தில் இல்லை என்றும் பிரபு எதார்த்தமாக அப்படி சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.