விருதுநகர் அருகே, நோயால் பாதிக்கப்பட்டு, மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் இருந்த தாய், இரு மகள்கள் என 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். விருதுநகர் அருகே பட்டம்புதூர் ரயில்வே தண்டவாளத்தில், உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரிக்கையில், இறந்தது தாய், இரு மகள்கள் என தெரியவந்தது.
பட்டம்புதூர் காலணியை சேர்ந்த ராஜவல்லி (60), கணவர் தர்மர் (கூலி தொழிலாளி). இவர்களுக்கு, மாரியம்மாள் (30), முத்து பேச்சி (25), முத்துமாரி என மூன்று மகள்கள் உள்ளன. முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகளான மாரியம்மாள், முத்துபேச்சுக்கு திருமணம் நடக்கவில்லை. மேலும் ராஜ வள்ளிக்கு, சிறுநீரக குறைபாடு இருந்த நிலையில், அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
கடும் மன உளைச்சலில் இருந்த ராஜவள்ளி, புதன்கிழமை மாலை, திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் ரயில் முன்பு, தன் இரு மகள்களுடன், தற்கொலை செய்து கொண்டார். துண்டு துண்டாக போன உடல் பாகங்களை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
