இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், நடன கலைஞர் தனுஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து , இருவரும் மும்பை குடும்பம் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 மாதங்களாக பிரிந்து இருந்த காரணத்தினால் நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்துக் கொடுத்தது. மேலும் கிரிக்கெட் வீரர் தனுஸ்ரீக்கு ஜீவனாம்சம் ஆக ரூ. 4.75 கோடி கொடுத்துள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனுஸ்ரீ வர்மாவை இணையதளத்தில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர். தனுஸ்ரீ வருமா முதல்முறையாக விவாகரத்திற்குப் பிறகு மனம் திறந்து பேசி உள்ளார். அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் . அதே போல் இரு பக்கமும் நியாயங்கள் இருக்கும். ஒரு கையைத் தட்டினால் ஓசை வராது இரண்டு கையும் தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல் ஒருவர் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் பேசுவது சரி இல்லை. இங்கு பலரும் தெரியாத விஷயத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது , எதிர்காலத்தில் அனைத்தையும் கூறுகிறேன். அதேபோல் அனைவர் வாழ்க்கையிலும் பல விஷயங்கள் நடந்திருக்கும் அதை நினைத்துக் கொண்டே இருக்காமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் ஆனால் இணையதள வாசிகள் என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல. இருவரும் சம்பந்தப்பட்டு தான் விவாகரத்து வாங்க சென்றோம் இருப்பினும் நீதிமன்றத்தில் நான் அழுது கதறியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது என்று தனுஸ்ரீ வருமா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
