தீபாவளிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… இந்தப் பொருட்கள் விலை எல்லாம் குறைய போகுது… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

By Srimathi on ஆவணி 20, 2025

Spread the love

நடுத்தர மக்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றங்களை கொண்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பேசியவர், இந்த மாற்றங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு தீபாவளி போனஸ் ஆக அமையும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.

புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பு :

   

தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 %, 28 % என்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு, 5 % , 18 % என இரண்டு அடுக்குகளாக குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலை, பான் மசாலா மற்றும் இதர ஆடம்பர பொருட்களுக்கு, 40 % வரி உயர்வை அறிமுகப்படுத்தவும், அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரியின் மூலம், மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசியம் மற்றும் அன்றாட பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

5 % வரி வரம்புக்குள் வரும் பொருட்கள் :

 
  • காய்கறிகள்
  • சாக்லேட்
  • மாவு வகைகள்
  • நொறுக்கு தீனிகள்
  • நட்ஸ்
  • கொக்கோ பொருட்கள்
  • பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்
  • வெண்ணெய்
  • நெய்
  • ஆடைகள்
  • செருப்புகள்
  • கண் கண்ணாடிகள்
  • சைக்கிள்கள்
  • உயிர் காக்கும் மருந்துகள்
  • மருத்துவ உபகரணங்கள்

18 % வரி வரம்புக்குள் வரும் பொருட்கள் :  

  •  டிவி
  • ஃபிரிட்ஜ்
  • ஏசி
  •  350 சிசி வரையிலான இருசக்கர வாகனங்களுக்கான வரி
  • 1200சிசி வரையிலான சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி மற்றும் சேல்ஸ் வரி
  • ஹைப்ரிட் வகை கார்களுக்கான வரி

விலை உயரவிருக்கும் பொருட்கள் :

  • புகையிலை
  • பான் மசாலா
  • வைரம்
  • விலைமதிப்பற்ற கற்கள்
  • பெட்ரோலிய பொருட்கள்

இந்த சீர்திருத்தங்கள், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர் அமித் ஷா,ராஜநாத் சிங், நிர்மலா சீதாராமன் போன்றோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற, ஜிஎஸ்டி கொள்கை உருவாக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலிங் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின், இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும்.