“அந்த வைரத்தை இழந்துட்டோம்.. இந்த தங்கத்தை இழக்க மாட்டோம்” தவெகவினர் ஒட்டிய எமோஷனல் போஸ்டர்..!!

By Meena on ஆவணி 20, 2025

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை கிராமத்தில் சென்ற ஆண்டு நடந்தது. தற்போது கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடக்க உள்ளது. இதற்காக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பார்வதி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான வேலைகள் நடந்து வருகிறது. மாநாட்டு மேடையில் இருக்கைகள், மின்விளக்குகள் போன்ற அமைப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கு சில மணி  நேரங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து இப்போதே நிர்வாகிகள் வர தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தவெக மாநாட்டிற்காக மதுரையில் பல இடங்களில் போஸ்டர்கள் , பேனர்கள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் விஜய் மற்றும் விஜயகாந்த் புகைப்படங்கள் வைத்துள்ளனர். அந்த பேனரில் விஜய்யின் தோள் மீது விஜயகாந்த் கை வைப்பது போல் புகைப்படம் இருந்திருக்கிறது. மேலும் அதில் “வைரத்தை இழந்து விட்டோம் தங்கத்தை இழந்து விட மாட்டோம் “என்று எழுதியுள்ளது. தற்போது இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதே போலவே மதுரையில் தவெக மாநாடு நடக்கும் இடத்தில் அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் கூடிய விஜய்யின் பேனர்கள் வைக்கப்பட்டு,அதில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று எழுதப்பட்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.