அந்த படத்துல ஹீரோ நானாக இருந்தாலும்… அவங்களால தான் படமே ஓடுச்சி… நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்..!

By Meena on ஆவணி 19, 2025

Spread the love

இந்திய அளவில் பிரபலமான முன்னாடி நடிகர்களில் ஒருவர்தான் நாகர்ஜுனா . இவர் தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் குபேரா. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெளியான கூலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

நாகர்ஜுனா நடித்த படங்களில் ஒன்று ‘ஆக்கரி போராட்டம்’. இந்த படம் பெரிய வசூலையும் வெற்றியையும் பெற்று தந்தது. இப்படத்தை குறித்து தகவல் ஒன்றை  பேட்டி ஒன்றில்  பகிர்ந்துள்ளார். அதில் இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ராகவேந்திரா ராவ் மற்றும் கதாநாயகி ஸ்ரீதேவி ஆகியர்தான். அதில் ஹீரோவாக நடித்த நான் வெறும் பொம்மையாக இருந்தேன் என்று கூறியிருந்தார்.