கேரளா மாநிலத்தில், மணலோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23), குறன்குளம் பகுதியை சேர்ந்தவர் அம்ருதா (18). இவர் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பதிவு திருமணம் செய்து கொண்டு, மணலோடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேஷின் தாயாரும், அதே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அமிர்தா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், வீட்டிலிருந்த ராஜேஷ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதை அறியாத அவரது தாயார், ராஜேஷின் உடலை மீட்டு வீட்டில் உள்ள சோபாவில் வைத்துள்ளார்.
உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த அமிர்தா, ராஜேஷ் சோபாவில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அமிர்தாவும் தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கயிற்றில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
