தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானியலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நாளை வலுவடைகிறது.
இதனால், நாளை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
