எறும்புத்தின்னிகள் எதற்காக அதிகம் கடத்தப்படுகிறது தெரியுமா?… பலரும் அறியாத வியக்கவைக்கும் ஆச்சரிய தகவல்..

By Srimathi on ஆவணி 18, 2025

Spread the love

எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படும் உயிரினம், உலகில் 8 வகை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன. இந்திய எறும்புதின்னி (Indian Pangolin), சீன எறும்புதின்னி (Chinese Pangolin), சுந்தா எறும்புதின்னி (Sunda Pangolin), பலவன் எறும்புதின்னி (Palawan Pangolin) என்னும் 4 வகை எறும்புதின்னி இனங்கள் ஆசியாவில் உள்ளன. 2500 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்களிலும், உயர்ந்த இமய மலைபோன்ற பகுதிகளிலும், வறண்ட பகுதிகளும், இந்தியாவில் உள்ள எறும்புதின்னிகள் காணப்படும். இது பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் வாழும். எறும்பு தின்னிகளை பலரும் பார்த்திருப்போம் ஆனால் அது எறும்பு தின்னி தான் என்று தெரியவாய்ப்பு இல்லை.

வாழ்கை முறை :

   
  •  ‘இந்திய எறும்புதின்னி’ – தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற காடுகளில் வாழ்கின்றன.
  • இது வெளியில் வாராமல் மறைந்து வாழும் இயல்பு கொண்டவை.
  • இது பெரிய செதில்கள் கொண்ட தோற்றத்தை கொண்டிருக்கும் ஏனெனில் அவைகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் கவசமாகும்
  • விலங்குகள் தாக்க வரும் பொழுது தற்காப்புக்காக தன்னை ஒரு பந்து (வால்வேஷன்) போன்று சுருட்டிக்  கொள்கிறது.
  • அதன் செதில்களின் நிறம், சுற்றுப்புறங்களில் உள்ள நிறத்திற்கு மாறுகிறது.
  •  மோப்ப சக்தியை பயன்படுத்தி, நீண்ட கால் நகங்களை பயன்படுத்தி, மண் மேடுகளில் பள்ளங்களை தோண்டி, உணவு தேடுகிறது.
  • பூமிக்குள், 3 முதல் 5 மீட்டர் ஆழம் தோண்டி, அங்குள்ள கரையான்களை பிடித்து சாப்பிடும்.
  • அதன் செதில்கள் முன் கால்கள் வட வலிமை கொண்டதாக இருக்கும்.
  • வேட்டையாடும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பொந்துகளில் உறங்கும்.

எறும்பு தின்னியை வியாபார பொருளாக பார்ப்பது ஏன் ? 

   
  • எறும்பு தின்னிகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
  •  இறைச்சிக்காகவும், மருந்துகள் தயாரிப்புக்கான முக்கிய பொருளாக, இந்த விலங்கை வேட்டையாடுகிறார்கள்.
  • வெளிநாட்டுகளுக்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டு இதன் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
  • கிராமப் புறங்களில், பாரம்பிய மருத்துவம் மற்றும் நாட்டுப்புற வைத்தியங்களுக்கு அதிகமாக எரும்பு திண்ணைகளின் செதில்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • எறும்பு தின்னிகள் அழிந்து வருவதற்கு கடத்தல், உணவு இன்மை, வாழ்வியல் இன்மை, உணவுக்காக வேட்டையாடுதல் போன்ற பல கரணங்கள் உள்ளன.
  • இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மாத்திரம் எறும்புத்தின்னிகள் உள்ளன .
  • 30 ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் என்பதால் பலரும் இதை மூடநம்பிக்கைகாக  உபயோகிக்கின்றனர்.
  •  இதற்கு ஆபத்தான தருணத்தில், வெறுப்பூட்டுகிற, துர்நாற்றம் கொண்ட திரவத்தை ஆசனவாய்க்கு அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கும்.  இதனால் அதனை கொள்ள வரும் விலங்கு விலகி செல்லும்.