சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி… தமிழக அரசின் புதிய மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 17, 2025

Spread the love

தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (persenceless registration) முறையை அறிமுகப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராகி வருகின்றது. அதன்படி சொத்துக்களை விற்பவரோ அல்லது வாங்குபவரோ பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார் பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்த ஆண்டு இறுதிக்குள் இது தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.