தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அரசியல் கட்சியினர் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒருபுறம் திமுக ஆட்சியை மீண்டும் பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது. அதிமுக விட்ட ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அடுத்ததாக விஜய் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் திமுகவில் உள்ள மிகப்பெரிய தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணையவுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “சில முக்கிய திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். அதிமுக கட்சியிலிருந்து சிலர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், எல்.முருகனின் இந்த பேச்சு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
