நெல்லையில் மீண்டும் பரபரப்பு..! மகளை காதலித்த இளைஞரை கத்தியால் குத்திய தந்தை… பலத்த காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!!

By Soundarya on ஆவணி 17, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பரம் முத்துநகர் காலனியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மகன் சிவகுமார். 29 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும் இளம் பெண் ஒருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பிரிந்து விட்டார்கள். இதற்கு அந்த பெண்ணின் தம்பியின் நண்பர் தான் காரணம் என்று கருதிய சிவகுமார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கோவில் கொடை விழாவிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் தன்னுடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை சிவக்குமாரிடம் எதற்காக அடிக்கடி தவறாக செய்கிறாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரின் மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரின் அடிப்படையில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து  தலைமறைவான பெண்ணின் தந்தை சந்திரன் என்பவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.