ஸ்ரீதேவி மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..? யாரும் இப்படி பேச மாட்டாங்க… கொந்தளித்த நடிகை பவித்ரா மேனன்..!!

By Soundarya on ஆவணி 17, 2025

Spread the love

மேடாக் பிலிம்ஸ் தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி படத்தில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் 29ம் தேதி  ரிலீஸ் ஆகிறது.  படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது.

இந்நிலையில் பரமசுந்தரி ட்ரெய்லரில் ஜான்விகபூர் பேசும் மலையாள உச்சரிப்பில் பிழை உள்ளது. கேரளாவில் எந்த பெண்ணும் இப்படி பேச மாட்டார்கள். கேரளத்துப் பெண் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகைகளை நடிக்க வைப்பதில் என்ன பிரச்சனை? நாங்கள் திறமை குறைந்தவர்களா? ஸ்ரீதேவி மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று ஜான்விக்கு எதிராக பவித்ரா மேனன் கொந்தளித்துள்ளார்.
.