சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் பாலா. இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்தவர் செம டைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார். தற்போது காமெடியனாக இருந்த இவர் ஹீரோவாகி காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவர் நடிப்பின் மூலம் வரும் பணத்தை வைத்து கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, கிராமப்புற மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை, கர்ப்பிணிகளுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வறுமையில் வாடுபவர்களுக்கு சொந்த தொழில் என ஏராளமான உதவிகளை பாலா தொடர்ந்து செய்து வருகின்றார். இப்படியான நிலையில் பாலா தற்போது இளைஞர் ஒருவருக்கு செய்துள்ள உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குடும்ப சூழ்நிலையால் வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்ட ஒரு நபருக்கு சொந்தமாக ஒரு பிரஷ் ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் ட்ரக் வாங்கி கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோவை பாலா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
