மக்களே உஷார்… அரங்கேறும் புதிய வகை மோசடி… காவல்துறையையே அதிர வைத்த சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 14, 2025

Spread the love

நம் நாட்டில் சில ஆண்டுகளாகவே சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எவ்வளவுதான் மக்களிடம் விழிப்புணர்வு கொடுத்தாலுமே இன்றுவரையிலும் பூமியில் ஏதோ ஒரு மூலையில் சைபர் கிரைம் மூலம் பண மோசடி வழக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடு இல்லை, அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. புதிது புதிதாக வழிகளை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று வங்கி கணக்கை விலைக்கு வாங்கி புதிதாக பணங்களைத் திருட ஆரம்பித்து உள்ளார்கள்.  இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக வந்துள்ளது. போலி வங்கிக் கணக்கு, அல்லது நிதி நிறுவனங்களை தொடங்கி பணத்தை திருடு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த மோசடி கும்பலை பிடிக்க காவல்துறையினர்கள் மும்பை ,குஜராத் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு போய் விசாரித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல். வங்கிக் கணக்கு அட்டைகளை மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை மற்றும் காசோலை புத்தகங்களை ரூ. 10,000 முதல் 20,000 வரை கொடுத்து விலக்கி வாங்கி வைத்துள்ளார்களாம். இதனால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும், காவல்துறை தரப்பில் கூறியுள்ளார்கள். மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டியவை, யாரேனும் பணத்தை இழந்தால் இல்லை உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் பலத்தை இழந்தால் உடனே 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.

   

உடனே புகார் அளித்தால் மட்டுமே அந்த வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும். பொதுமக்கள் விழிப்புணர்வோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். ஒரு வேலை பணத்தை இழந்தால் காலம் தாமதிக்காமல் உடனே காவல்துறையில் புகார் இடுங்கள். சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இடம் ரூ. 97 லட்சத்தை மர்ம நபர்கள் ஏமாற்றி உள்ளார்கள்.

   

இதைக் குறித்து ராமநாதபுரம் எஸ். பி .சந்திஸ் கூறுகையில், சிம் கார்டு மற்றும் மொபைல் ஃபோன்களை புதிதாக வாங்குவது போல பணம் கொடுத்து வேற ஒருவரின் வங்கி கணக்கை கூட வாங்கலாம் போல. அது போன்ற மோசடி தான் இந்த காலகட்டத்தில் நடந்து வருகிறது. ஆகவே, மக்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் செயல்படுங்கள் என்று எச்சரித்துள்ளார்.