தமிழகத்தில் ஆகஸ்ட் 15 நாளை சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதேசமயம் பெரும்பாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு இன்று சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
அதாவது சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 650 முதல் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் தொடர் விடுமுறை நாட்களில் 1500 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கட்டணம் கிடையாது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 1300 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே நெல்லையில் இருந்து சென்னைக்கு வர 1500 முதல் 2000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சில பேருந்துகளில் இரு மடங்கை தாண்டி டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த பேருந்துகளில் இருக்கைகள் ஓரளவுக்கு நிரம்பி குறைந்த அளவிலே காலியிடங்கள் உள்ளன. எவ்வளவு கட்டணம் என்றாலும் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவர்கள் பயணிக்க தான் போகின்றன. ஒவ்வொரு முறையும் இது போன்ற தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கட்டணம் உயர்வு குறித்து பேசுவதும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில் இதுவரை இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு நடுவில் மக்கள் தான் அவதிப்படுகின்றனர்.
