தமிழகத்தில் TNPSC குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 இன்றே கடைசி நாள் ஆகும். இதுவரை தேர்வுக்கு சுமார் 4.46 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மூலம் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்க www.tnpscexams.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
