அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி சற்றுமுன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அந்த வரிசையில் தற்போது மைத்ரேயனும் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
