மக்களே..! “1 இல்ல மொத்தம் 50” இனி WhatsApp மட்டும் இருந்தா போதும்… வீட்டிலிருந்தபடியே எளிதில்…. தமிழக அரசு பக்கா அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 13, 2025

Spread the love

மத்திய மற்றும் மாநில அரசுகள் தாங்கள் கொண்டு வரும் புதிய திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது,  தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துவது போன்ற விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், என்ன தான் அரசு இப்படி முயன்றாலும் நலத்திட்டங்கள் பற்றிய  தகவல்கள் சொற்ப அளவிலான மக்களை மட்டும் தான் சென்றடைகின்றது. தற்போது அனைவருடையு  கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. கரம் முதல் கிராமம் வரை அனைவருமே வாட்ஸ்-அப் பயன்படுத்தத் தெரியாத நபர்களே கிடையாது என்ற நிலை உருவாகி வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசனது அரசின் 50 சேவைகள் விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, வருவாய் சான்றிதழ், அரசு பேருந்து டிக்கெட் உள்ளிட்ட சேவைகள் அனைத்துமே இனி வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே TN DIPR என்ற Whatsapp சேனல் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.