BREAKING: ஆகஸ்ட் 15 முதல் அமல்… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி FASTAG கட்டாயம்… சற்றுமுன் அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 12, 2025

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் தேவஸ்தானம் சார்பில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அலிபிரி சோதனை சாவடியில் அனுமதி இல்லை எனவும் பக்தர்களின் வசதிக்காக பாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் அப்ளை செய்து புதிய ஐடி பெற கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி செல்வோர் இதனை மறக்காமல் செய்து விடுங்கள்.