இந்தியாவில் ஏற்கனவே 540 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன. இவை கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் போன்ற லாபநோக்கமற்ற நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. மேலும் சில பள்ளிகள் கல்வியை அடிப்படையாக கொண்ட சமூக வானொலியை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது.
ஏற்கனவே “ஷிக் ஷா வாணி” பாட்காஸ்ட் மூலம் படங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் NCERT பாடத்திட்டத்தின் படி பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும் மாணவர்களின் கட்டளை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
