மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் என்ற பகுதியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே போலீசார் அங்கு ரெய்டு நடத்திய நிலையில் 12 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது அந்த சிறுமி சொந்த நாடு பங்களாதேஷ் ஆகும். அந்தப் பெண்ணை நிலைக்குத் தள்ளியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த போது, அவரை கடத்தல்காரர்கள் குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும் அப்போது மூன்று மாதத்தில் 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட சிறுமி பள்ளியில் படித்த போது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் பெற்றோருக்கு பயந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். அந்தப் பெண் சிறுமியை இந்தியாவிற்குள் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
