BREAKING: தமிழகத்திற்கு புயல் சின்னம்… கனமழை வெளுத்து வாங்ப்போகுது… புதிய அலெர்ட்…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே ஆகஸ்ட் 13ஆம் தேதி வடமேற்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.