அதிமுகவுடன் கூட்டணியில்லை… ஆனால் ஜனவரி-9 ஆம் தேதி அறிவிப்போம்…பிரேமலதா சொன்ன விஷயம்..!!

By Soundarya on ஆவணி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் நலம் விசாரிக்க மட்டுமே ஸ்டாலினை சந்திக்க சென்றதாக பிரேமலதா கூறினாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல யூகங்களுக்கு வித்திட்டு உள்ளது. இதுஒருபுரம் இருக்க மறுபுறம் திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியுடன் பிரேமலதா சந்தித்துள்ளார்.

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக கூறப்பட்டது. ஒருசிலரோ சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில், அவரது ஹோட்டலில் தங்கி இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்ல முடியாது எனவும் பிரேமலதா விளக்கியுள்ளார். 2026 ஜன. 9-ல் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் கூறியிருக்கிறார் பிரேமலதா.