கோபி – சுதாகருக்கு விருதே கொடுக்கலாம்… பாவம் அந்த பிள்ளைங்க…. திருமாவளவன் காட்டம்…!

By Srimathi on ஆவணி 9, 2025

Spread the love

பரிதாபங்கள்” யூடியூப் சேனலை  நடத்தி வருபவர் தான் கோபி-சுதாகர். இவர்கள், சமூகத்தில் நடக்கும் அவலங்களை, காமெடியாக வீடியோ மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில், சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் கவினின் ஆணவக் கொலைக்கு எதிரான வீடியோவை வெளியிட்டனர். அதில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களை சாதி வெறியால் மூளைச்சலவை செய்து, கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். அதில், சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே இல்லை என்றால் இப்படித்தான் நாசமாக போவீர்கள் என்பதையும் காட்சிப்படுத்தினர். அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டியதை, இவர்கள் செய்துள்ளனர் என்று பல சமூக ஆர்வலர்கள் ரசிகர்களும் இந்த டீமை பாராட்டினர்.

எந்த அளவிற்கு, இந்த நிகழ்ச்சி வரவேற்கப்பட்டதோ, அதே அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாக்கி பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக கோவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் கோபி சுதாகர் மீது புகார் கொடுத்து அட் சேனலை முடக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி முறையற்ற வார்த்தைகளால் பேசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு தெரிவித்தது. இன்று நெல்லையில் கவினின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஆவணக் கொலை தடுப்பு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் இன்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

   

அதில் பேசிய விசிக தலைவர், இந்த தம்பிங்க மிகவும் நேர்மையாக யாரையும் குறிப்பிட்டு தாக்காமல் வீடியோ போட்டு இருக்காங்க. இந்த பிள்ளைகளுக்கு எந்த விருது கொடுத்தாலும் பொருந்தும். இச்சமூகத்தில் இருப்பதை அப்படியே பேசி இருக்கிறார்கள். அவர்கள் கூறியதை நான் மேடையில் பேசியிருந்தால், பெரிய விமர்சனமாக மாறி இருக்கும். அந்த பசங்களை மிரட்டி கோர்ட்டுக்கு இழுத்துட்டாங்க. நல்ல வேலை அவர்கள் தலித் அல்லாத பிள்ளைகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.