பதவிக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல… ராமதாஸ் ஐயா தான் என் குலதெய்வம்… மேடையில் எமோஷனலான அன்புமணி..!

By Divyamayakannan on ஆவணி 9, 2025

Spread the love

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொழுதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசிய போது, யார் வரவேண்டும் என்பது மிகவும் முக்கியம். நல்லதொரு கூட்டணியை அமைப்போம்,  நாம் ஆட்சிக்கு வருவோம். அது இன்னும் சில நாட்களிலேயே நடக்கும். மக்களின் விருப்பப்படி கூட்டணி அமைப்போம். வருகின்ற அடுத்த  6மாத காலம் கடுமையாக உழைக்க வேண்டும், நம்பிக்கையுடனும் உழைக்க வேண்டும்,  ஒற்றுமையாகவும் உழைக்க வேண்டும்.

நம்முடைய வழிகாட்டி ஐயா ராமதாஸ் அவர்களே நம்முடைய குலதெய்வம். அவர் இன்று நம் அருகில் இல்லை இருப்பினும் அனைவர் உள்ளத்திலும் இருக்கிறார். இங்கே இருக்கும் நாற்காலி என்றுமே அவருக்கானது, அதில் மாற்றம் ஒன்றும் இல்லை. அதே வேளையில் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை கால கட்டாயத்திற்காக உங்கள் முன் நிற்கிறேன். வியர்வை, ரத்தம் சிந்தி, உயிர தியாகம் செய்து கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சாமிக்கு சில நேரம் கோபம் வருமாம்,  அப்போது திருவிழா போன்றவை எடுப்போம் இதில் பூசாரிக்கு தான் என்ன பிரச்சனை என்று அன்புமணி  பேசியுள்ளார்.