சென்னை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி டிராபிக் தொல்லை இருக்காது… புதிய நடைமுறை அமல்…!

By Srimathi on ஆவணி 9, 2025

Spread the love

தாம்பரத்தில் கூட்ட நெரிசலை குறைக்க, காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை குறிப்பிட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரத்திலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியே செல்ல நினைப்பவர்கள் இந்த போக்குவரத்தை நெரிசலைக் கண்டு அஞ்சுகின்றனர்.

தாம்பரம் நெரிசல்

   

இது தொடர்பாக தாம்பரம் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்ப்பதற்காக, காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை, ஜி.எஸ்.டி. சாலை தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் – பம்மல் – குன்றத்தூர் சாலை திருநீர்மலை சாலை 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் காந்தி ரோடு – முடிச்சூர் சாலைகளில் கனரக வாகனம் செல்வதற்கு தாம்பர மாநகர காவல்துறை, போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

   

கனரக வாகனம் செல்லும் வழி 

 

குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் – அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்லவும், ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்லவும், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் – சென்னை

தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தாம்பரம் fly-over (Southern Side) பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் flyover மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்லவும், மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் -மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்லவும், செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் ஓஎம்ஆர் மற்றும் இ சி ஆர் சாலை பயன்படுத்தி இந்த புதிய அறிவிப்புக்கு ஒத்துழைக்குமாறு தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.