ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஐஸ்கிரீமை விரும்பி உண்ணுகிறார்கள். தற்போது புதிதாக தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. பெற்றோர் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரிடா மற்றும் ஆட்ஃபெல்லோஸ் (oddfellows) நிறுவனம் இணைந்து தாய்ப்பால் ஐஸ்கிரீம் (Breast milk icecream) தயாரித்துள்ளன. இந்த ஐஸ்கிரீம் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை நியூயார்க் நகரில் உள்ள ஆட்ஃபெல்லோஸ் டம்போ கடையில் கிடைக்கும் .
இந்த ஐஸ் கிரீம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்குமாம். இந்த ஐஸ்கிரீம் உண்மையாலுமே தாய்ப்பாலில் தயாரித்தது இல்லை. தாய்ப்பால் சுவையில் தயாரித்துள்ளது. சுவைக்காக பால், கனமான கிரீம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், தேன் சிரப் , முட்டையின் மஞ்சள் கரு, மஞ்சள் உணவு நிறம் இது போன்ற 40 வகையான பொருட்களை சேர்த்து தாய்ப்பால் ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். இந்த ஐஸ்கிரீம் 12.99 அமெரிக்க டாலர் ஆகும். ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம். இந்திய ரூபாயின் படி 1,137.64 ரூபாய் ஆகும். விரும்பியோர் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐஸ்கிரீமை சுவையுங்கள்.
