மத்திய அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தேசிய தொலை மருத்துவ சேவை என அழைக்கப்படும் ‘இ-சஞ்சீவனி’ (esanjeevani.in) திட்டம் கடந்த 2019ல் கொரோனா காலத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவர்கள் இணைய வழியில் இலவசமாக வழங்கி வருகின்றனர். நாட்டின் எந்த மூலையிலிருந்து கொண்டும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.
மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவர்கள் இ-பிரிஸ்கிரிப்ஷன் வழங்குவார்கள். அதனை மருந்தகத்தில் காட்டி மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவங்களிலும் ஆலோசனை பெறலாம்.
