பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் . பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. பாகிஸ்தான் ஏ அணியான பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணியோடு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த ஹைதர் அலியை கிரேட்டர் மான்செஸ்டர் காவல் துறையினர் கைது செய்தார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது .கைது செய்யப்பட்ட இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் .மேலும் அவருடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
