ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 22 வயது பெண்ணை ஐ லவ் யூ சொல்ல கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த பெண் மறுத்ததால் அந்த பெண்ணை கத்தியால் தாக்கி விட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் என்பவர் 22 வயது சிறுமி ஒருவரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்னை நீ காதலிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடைய அம்மா வேலையாக வெளியே சென்று இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் பிரமோத் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக துன்புறுத்த தொடங்கியுள்ளார். அதன்பிறகு அந்த பெண் கத்த தொடங்கியதும் வீட்டை விட்டு ஓடி உள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த பெண் வயலுக்குச் சென்றபோது வழிமறித்து அந்த இளைஞர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் பரிதாபமாக அந்த பெண் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் பல தற்போது உயிர் பிழைத்துள்ளார் . இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
