தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வில்லிசேரியை சேர்ந்த அய்யனார் என்பவர் மகன் செல்வராஜ்(வயது 54). இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் மற்றும் மகள் கௌசல்யா கடந்த ஜூன் 13ஆம் தேதி கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனர்.
அப்பொழுது காற்று நன்றாக வீசியதால் கொசுவர்த்தியில் உள்ள தீப்பொறி அருகில் உள்ள சாக்கில் விழுந்து தீ பற்றியது. மாரியம்மாள் சேலையிலும் தீப்பிடித்தது. இதில் மாரியம்மாளும் செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரியம்மாள் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
