இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி செல்போன் பயன்படுத்தக்கூடிய இளைஞர்களின் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது ஒரு பக்கம் பொழுது போக்காக இருந்தாலும் மறுபக்கம் பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. அதனை யாரும் உணர்வதில்லை. அப்படி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமி ஒருவருக்கு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் என்ற பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றான்.
இந்த சிறுவன் திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளான். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் சிறுமியை ஆசைபார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். Instagram காதல் மூலமாக சிறுமி சீரழிந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
