உணவருந்தி விட்டு ரோடு ரோலர் அடியில் நிம்மதியாக தூங்கிய தொழிலாளி.. நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 4, 2025

Spread the love

மேற்கு வங்கள மாநிலத்தில் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிக்கிபிஷ்வால் (21). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார்சத்திரம் பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று அவர் பணியின் போது உணவருந்திய பின் நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலரின் கீழே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்க்காத ரோடுரோலர் டிரைவர் ரோலரை இயக்கிய போது பிக்கிபிஷ்வால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர் .