இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்…?

By Nanthini on ஆவணி 3, 2025

Spread the love

தமிழகத்தில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகின்றது.

வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

   

தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. அதேசமயம் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியிலும் இன்று கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை சூரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.