தினமும் காலையில் எழுந்ததும் பெரும்பாலானோர் டீ, காபி குடிப்பதை தான் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதனால் நம்முடைய உடலுக்கு கெடுதல் தான் ஏற்படும். அதுவே தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சுடுதண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. தினமும் காலை நம்மால் குடிக்க முடிந்த சூட்டில் 200 மில்லி லிட்டர் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வது நம்முடைய உடல் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் மலச்சிக்கல், வாய்வு ஆகிய தொல்லைகள் நீங்கும்.
சிறுநீரகத்தில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். கல்லீரல் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை தீரும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதயம் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கும். உணவு ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும். தசை மற்றும் மூட்டுகளில் உள்ள இறுக்கம் குறையும். சுறுசுறுப்பு அதிகமாகும். சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வெந்நீர் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் சுடுதண்ணீர் குடிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும்.
