தமிழகம் முழுவதும் நாளை “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்… இதன் சிறப்புகள் என்னென்ன..? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

By Soundarya on ஆவணி 1, 2025

Spread the love

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக தொடங்கி வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை சென்னையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள்.

மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள் மற்றும் குடிசை பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் செயல்படுத்தப்படுகிறது. முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது மூக்கு மற்றும் பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும் சிகிச்சை முடிவுகள் அன்றைய தினமே மெசேஜ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். அதுமட்டுமின்றி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்படுகிறது.