தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக தொடங்கி வைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நாளை சென்னையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள்.
